Sunday, March 12, 2006

வேலைக்கான சரியான நபர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

சுமார் நூறு கற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு மூடிய அறைக்குள் வைத்து ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்துவிடவும்.வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் 3 அல்லது 4 நபர்களை அந்த அறைக்குள் அனுப்பி கதவை மூடிவிடவும்.அவர்களை தனியாக விட்டுவிட்டு சுமார் 6 மணி நேரம் கழித்து நிலமை என்னவென்று பார்க்கவும்.

  • அவர்கள் கற்களை எண்ணிக்கொண்டிருந்தால் கணக்கு (accounts) துறையில் போடவும்.
  • திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருந்தால் கணக்காய்வு, தணிக்கை துறையில் போடவும் (auditing)
  • அறை முழுவதும் எல்லா கற்களையும் கலைத்துவிட்டிருந்தால் அவர்களை பொறியியல் (இன்ஜீனியரிங்) துறையில் போடவும்.
  • கற்களை வித்தியாசமான முறையில் அடுக்கியிருந்தால் திட்டத் துறையில் (planning) போடவும்.
  • கற்களை ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொண்டிருந்தால் செயல் மற்றும் இயக்கத்துறையில் (operation) போடவும்.
  • தூங்கிக்கொண்டிருந்தால், பாதுகாப்புத் துறையில் (Security) போடவும்
  • கற்களை உடைத்து துண்டுகளாக்கிக் கொண்டிருந்தால் தகவல் தொழில்நுபத்துறையில் (Information Technology) போடவும்.
  • அமைதியாக உட்கார்ந்துக் கொண்டிருந்தால் மனிதவள மேம்பாட்டுத்துறையில் (Human Resource Development) போடவும்.
  • நாங்கள் பல விதங்களில் முயற்சி செய்தோம் என்று அவர்கள் சொல்வதுடன், ஒரு கல்லையும் இன்னும் நகர்த்தாமல் வைத்திருந்தால், விற்பனை துறையில் (sales) போடவும்.
  • நீங்கள் அங்கு போகும் போது அவர்கள் ஏற்கனவே போய் விட்டிருந்தால் சந்தை படுத்துதல் (marketing) துறையில் போடவும்.
  • ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் முக்கிய முடிவு எடுக்கும் திட்டக்குழுவில் (strategic Planning) போடவும்
  • இறுதியாக ஆனால் முக்கியமாக அவர்கள் ஒரு கல்லையும் நகர்த்தாமல் ஒருவரோடு ஒருவர் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி, நிறுவனத்தின் முக்கியமான உயர்ந்த நிர்வாகத்துறையில் (Top Management) போடவும்.

ஆங்கிலத்திலிருந்து சிறு முயற்சி.
-- மஞ்சூர் ராசா

http://manjoorraja.blogspot.com/

http://muththamiz.blogspot.com/

குழுமம்:http://groups.google.com/group/muththamiz

9 comments:

Anonymous said...

raaza,

nalla padhivu.

"manjoor"nu podreengale. adhu nilagiri maavattathula ulla manjoora?

siva
dubai

said...

நன்றி சிவா. அதே மஞ்சூர் தான்.

Anonymous said...

இனிய ராசா

தாங்கள் மஞ்சூர்வாசி என்பது என்னை மிகுந்த மகிழ்வு கொள்ள செய்தது. நான் மஞ்சூருக்கு வெகு அருகில் இருக்கும் குந்தாவில் 10 வருட-கள் வாசம் செய்தவன். மஞ்சூர் பள்ளியில் என்து மேனிலை வகுப்புகள் முடிதவன்.அதற்கு பிறகு கால மாற்றஙக்ளில் இப்போது துபாயில் பணி நிமித்தம் வசித்து வருகிறேன். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகின்றன நான் மஞ்சூர் விட்டு வந்து. ஆனால் என் நினைவுகளில் நீங்காது இடம் பெற்று எப்போதும் என்னை மகிழ்வு கொள்ள செய்வது எனது பள்ளி நாட்க்கள்தான். தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தங்களது தனி மடல் முகவரி அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

சிவா

said...

அன்பு நண்பரே எனது முகவரி:
sundarnb@gmail.com

said...

Nilagiriyil Aravangattil nangal irunthullom. Of course factory qrs.la than. Nilagiriyin Azhagum amaithiyum migavum pidikkum enakku.Nilagiriyil settle aga vendum enru ullora oru asai kooda undu. Anal en udalnilai karanamaga athu mudiya villai.Stop. Ungal pathivin vishayangal migavum nanrage ullathu.Nagaichuvai agavum ullathu.

said...

அன்பு கீதா மிகவும் நன்றி.நீங்கள் அருவங்காட்டில் இருந்ததை அறிந்து மேலும் மகிழ்ச்சி. இன்னொரு அருவங்காட்டு தோழியும் இங்கு உண்டு.
நீங்கள் தமிழில் எழுத சிரமப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் இமெயில் விலாசம் எனது இமெயிலுக்கு அனுப்பவும
முடிந்த உதவிகளை அளிக்கிறேன்.
முத்தமிழ் வலைப்பதிவு சென்று பார்க்கவும்.

said...

I have saved e-kalaappai but it is not opening. And I find it difficult to paste it in my blog. So I need somebody's help.Thank you for your offer.I will mail you soon.

said...

Google refused my e-mail because I am not a member of it. And it asked subscription to become a member. What can I do to become a member?Kindly explain me.

said...

அன்பு கீதா
நீங்கள் உங்கள் இமெயில் விலாசம் தரவும்.
உங்கள் மடலில் விலாசம் இல்லை.
கீழே உள்ளபடி இருக்கிறது.
Geetha Sambasivam noreply-comment@blogger.com

எனது விலாசம்.
sundarnb@gmail.com