
ஸ்லம்டாக் மில்லியனருக்கு எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஏஆர் ரகுமானுக்கு இரண்டு, குல்ஜாருக்கு ஒன்று, பூக்குட்டிக்கு ஒன்று.
இதைத் தவிர சிறந்த குறும்படத்துக்கான விருதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மைல் பிங்கி படத்திற்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துவோம்.
SMILE PINKI
Megan Mylan
ACADEMY AWARDS HISTORY
This is the first Academy Award nomination for Megan Mylan.
FILM SYNOPSIS
Pinki, a girl in rural India whose cleft lip has made her a social outcast, has a chance for a new life when she meets a dedicated social worker.
SMILE PINKI
Megan Mylan
ACCEPTANCE SPEECH
Wow! Oh, to be in a room with all this talent. Lucky me, and to tell stories for a living, lucky me. And to have a family and friends who love me and my movies totally unconditionally. Documentary, like all filmmaking, is a complete team sport, and I'd like to thank my editor Purcell Carson, cinematographers Nick Doob and Jon Shenk, field producer Nandini Rajwade and from HBO Sheila Nevins and Lisa Heller. The same magic that happens in our film happens every day for children with clefts all around the world because of a terrific organization called the Smile Train. But most importantly for documentary filmmakers it's our subjects. The incredible Dr. Subodh and his team, Ghutaru Chauhan and our heroine Pinki Kumari. Thank you, thank you, thank you for letting me tell your inspiring story. What a gift. Thank you all so much.
ACADEMY AWARDS HISTORY
This is the first Academy Award nomination for Megan Mylan.
SMILE PINKI
மாதவராஜ் சமீபத்தில் இந்தப் படத்தைப் பற்றி எழுதிய பதிவு கீழே:
http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_17.html
ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி
எட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் காணப் போகிறது. பிறந்தவுடன் இவள் முகத்தைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக்கொண்ட இவளது தாய் ஷிம்லாதேவி இப்போது மகளையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர்தபாஹி கிராமத்தில் இன்று இவள்தான் தேவதை. சிலகாலம் முன்பு வரை 'கிழிந்த உதட்டுக்காரி' என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நேசத்துடன் பிங்கி என்று அழைக்கிறார்கள். சகக் குழந்தை ஒன்று இவளைக் கட்டி அணைத்துக் கொள்கிறது.
யாருடனும் விளையாட முடியாமல், இயல்பாக பேச முடியாமல், பழக முடியாமல் போன பழைய நினைவுகள் எல்லாம் இப்போது ஆறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலம் கொடுமையானவை. பிறக்கும் போதே உதட்டில் இருந்த அந்த சிறு பிளவு இவளை மற்றவர்களிடமிருந்து தொலைதூரத்துக்கு விரட்டியிருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெதும்பும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகம் வாடிப் போகிறது. ஒருச் சின்னத் துண்டு நிலத்தில் எதோ வயிற்றுக்கும் வாய்க்குமாக ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இவளது தந்தை ராஜேந்திர சோங்கர் "இவள் செத்துப் போயிருக்கலாம்" என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு. முகத்தையே கோரமாக காண்பிக்கும் அந்த உதடுகளை சரி செய்யும் ஞானமும், பணமும் அவருக்கு இல்லை.
39 நிமிடங்கள் ஓடும் "ஸ்மைல் பிங்கி" எனும் இந்த ஆவணப்படம், பிங்கியின் முகத்தில் இருந்த துயரம் களையப்பட்டு புன்னகை பிறந்த கதையைச் சொல்கிறது. பங்கஜ் என்னும் சமூக சேவையாளர் ஒருவர், மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது சரி செய்ய முடியும் என நம்பிக்கையளித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சந்தித்து விளக்குகிறார். அப்படி அவர் காணும் குழந்தைகளில் பிங்கியும் ஒருத்தியாக இருக்கிறாள். ஸ்மைல் டிரெயின் என்னும் அமைப்பின் மூலம் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிங்கியிடம் கண்ணாடி கொடுக்கப்படுகிறது. ஆபரேஷன் நடந்த வலியையும் மீறி பிங்கி சிரிக்கிறாள்.
ஒவ்வொரு வருடமும் 35000 குழந்தைகள் இந்தியாவில் இப்படி கிழிந்த உதடுகளோடு பிறப்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபத்திற்குரியவர்களாய் வாழ்வதையும் குறிப்பிடுகிறது இந்த ஆவணப்படம். பல மேலை நாடுகளில், இப்படிப்பட்ட குறையொன்று இருப்பதே தெரியாதாம். அப்படி பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த நான்காவது நிமிடமே அறுவை சிகிச்சை எளிதாக நடந்து விடுமாம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் ஜன்னலைத் திறந்து வைப்பதாய் இருந்தால் போதும் என்கிறார் இப்படத்தை இயக்கிய, பிரேசில் நாட்டுக்காரரான மேஹன் மைலன்.
லாஸ் ஏஞ்செல்ஸுக்கு பிங்கி அவளது தந்தையோடும், அவளை ஆபரேஷன் செய்த டாக்டரோடும் செல்ல இருக்கிறாள். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த நிலமே அதிரும்படியாய் எப்போதாவது மேலே செல்லும் விமானத்தை அதிசயமாகப் பார்த்த அந்த சிறுமி, இன்னும் ஓரிரு நாட்களில், அதில் பயணம் செய்ய இருக்கிறாள். நிருபர் ஒருவர் பிங்கியிடம் கேட்கிறார். "ஆஸ்கர் என்றால் என்ன?". பதில் வருகிறது, "தெரியாது"
இதற்கு முன்னர் உலகத்தரத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்களை, நாட்டின் ஏழ்மையை சித்தரிப்பதாகவே இருக்கின்றன என்று விமர்சனம் செய்து ஒதுக்கியது நடந்தது. சத்யஜித்ரேவும் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆளானார். இன்று ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்திருக்கும் படங்கள் இரண்டு குறித்தும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமலிருப்பது விநோதமாக இருக்கிறது. எது எப்படியோ, 'நாடு பொருளாதார வளர்ச்சியில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது' என கதைப்பவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்?
அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. ஸ்லம் டாக் மில்லியனருக்கான ஆர்ப்பாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் இந்த மிக முக்கியமான நிகழ்வு பலருடைய கவனத்துக்கே வராமல் கரைந்து போயிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?
இவளது தேசம் பேசாவிட்டாலும், இவளது ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. "இவள் ஒரு தனலட்சுமி, பரிசோடுதான் வருவாள்" என்கிறார்கள் ஊர்மக்கள். இவளது தந்தையும் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்திய இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்கள் எப்போது இதுபோன்ற பரிசுகள் பெறும் என நாம் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.
பி.கு:
1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம்.
2.இந்தப் படத்தின் டிரெய்லரை இங்கே பார்க்கலாம்.
Sunday, February 22, 2009
ஸ்மைல் பிங்கி என்னும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது
Posted by
மஞ்சூர் ராசா
at
10:56 PM
6
comments
Links to this post
Tuesday, February 17, 2009
காதலர் தின ஸ்பெஷல்:அவிச்ச முட்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:ஒரு முட்டை + இரண்டு அலைபேசிகள்
கீழே உள்ள படத்தில் காட்டியது போல ஒரு இணைப்பு உருவாக்கவும்
+1.jpg)
இரண்டு அலைபேசிகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தி 65 நிமிடங்கள் வைக்கவும்.
முதல் 15 நிமிடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.
25 நிமிடங்களுக்கும் பிறகு முட்டையில் சூடேற ஆரம்பிக்கும்
45 நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்றாக சூடாகிவிடும்
65நிமிடங்களுக்கு பிறகு முட்டையை உடைத்துப்பார்க்கவும்.
அது நன்கு வேகவைக்கப்பட்ட முட்டையாக மாறிவிடும்.
+2.jpg)
முடிவு: அலைபேசிகளின் மூலம் ஏற்படும் கதிர்கள் முட்டையிலுள்ள புரதச்சத்தை மாற்றும் தன்மையுடையது. நீண்ட நேரம் அலைபேசியில் பேசுபவர்களின் மூளையிலுள்ள புரதச்சத்து என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்
தயவு செய்து நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவதை தவிர்க்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.
"மூளை இல்லாத காதலர்கள் இது பத்தி கவலைப்பட தேவையில்லை"
பின் குறிப்பு: ஆங்கிலத்தில் எனக்கு வந்த இந்த செய்தியில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அலைபேசிகளை அதிகம் பயன் படுத்துவதில் கண்டிப்பாக ஆபத்து இருக்கிறது. மேல் விவரங்களுக்கு நண்பர் சாதிக் அலியின் கீழுள்ள பதிவை பார்க்கவும்.
http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_1570.html.
Posted by
மஞ்சூர் ராசா
at
2:27 AM
9
comments
Links to this post
Wednesday, February 11, 2009
இன்று குவைத்தில் புழுதிமூட்டம்
இன்று காலையில் 
பத்து மணிக்கு
பதினொன்றரைக்கு
12.45ல்
தொடர்ந்து சாலைகள் தெரியாத அளவுக்கு தூசி மூடிக்கொண்டே வருகிறது.
Posted by
மஞ்சூர் ராசா
at
1:33 AM
6
comments
Links to this post
Sunday, October 19, 2008
“எனது விசா முடிய இன்னும் பதினைந்து நாட்களே உள்ளது”
புதிய வேலைக்கும் சேர்வதற்கு முன்பு வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பகல் நேரத்தை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது தான் என் தொலைபேசி மணி அடிக்க ஆரம்பித்தது. ஒரு பெண் குரல் “இந்த செய்தியை சொல்வதற்கு வருந்துகிறேன் நீங்கள் வரும் புதன்கிழமை உங்கள் புதியவேலைக்கு சேரவேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலையில் எங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.” அடுத்த முனையில் தொலைபேசி வைக்கப்படும் சத்தம் கேட்டது. எனது எச்1பி விசா முடிய இன்னும் முப்பத்தி ஆறு நாட்களே உள்ள நிலையில் இந்த அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்க கூடாது ஆனால் என்ன செய்ய. என் மதிய உணவு தீண்டப்படாமல் ஆறி அவலாக மாற ஆரம்பித்திருந்தது.
செப்டம்பர் மாதம். என்னை சுற்றியுள்ளவர்களை போலவே நானும் கையிருப்பு குறைவதையும் நாட்கள் வேகமாக நகர்வதையும் தாள முடியாமல் இருந்தேன். வேலைக்கு எடுக்கும் பல இந்திய நிறுவனங்களை தொடர்புக்கொள்ள ஆரம்பித்தேன். பலரும் இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் புதிதாக மிகவும் திறமையான பலர் வேலைக்காக தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னும் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே எனக்கு விசா இருக்கிறது. முதன் முதலாக நேவார்க் விமான நிலையத்தில் நான் இறங்கிய 2005ம் வருடம் ஜூலை எட்டாம் தேதி அடிக்கடி நினைவுக்கு வருகிறது. பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த தினம் அது. ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் ஆலோசகர் பணியில் சேர்வதற்காக வந்திருந்தேன்.
ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடுமையாக உழைத்து நிர்வாகம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலான பலனை அவர்களுக்கு அளித்தேன். தொடர்ந்து உச்சநிலையில் இருந்தேன். மேலும் மேலும் கடுமையாக உழைத்தேன். எப்படியும் எனது எம்பிஏ பட்டப்படிப்பு மூலம் இன்னும் மேல்நிலைக்கு செல்லவேண்டும் என்பதே என் ஆசை.
மிக சில நாட்களிலேயே என்னை அனுப்பிய இந்திய நிறுவனத்திற்கும் எனக்குமான உறவில் (பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் ஏற்படும் விரிசல் ) ஏற்பட நான் அந்த நிறுவனத்தை விட்டு விலகினேன். என்னை நேரடியாக அந்த அமெரிக்க நிதி நிறுவனமே வேலைக்கு எடுத்துக்கொண்டது. மன்ஹாட்டனில் உள்ள ஸ்வாங்கிற்கு ஜாகை மாறினேன். ஆரம்பத்தில் சில நாட்கள் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களிலேயே மோசமான செய்தி ஒன்று தெரியவந்தது. ஆரம்பத்தில் அலுவலகத்தில் சிலரால் மட்டும் கிசுகிசுப்பாக பேசப்பட்ட அந்த செய்தி சில நாட்களில் எல்லோராலும் பேசப்பட்டது. ஆம். எங்கள் நிறுவனம் 2008 மார்ச் மாதம் விற்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர். என்னை போல ஒருசிலருக்கு மட்டுமே வேலை இருந்தது. எனது நெருங்கிய நண்பர் வேலை போனதால் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்.
நானும் உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும் என முடிவு செய்தேன். பல வணிகத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட்டின் மிக பெரிய நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக நஸ்டத்தினால் மூடப்பட்டுக்கொண்டிருந்தது. பிட்ஸ்பர்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்ததால் அங்கு இடம் மாறினேன்.
இங்கு வந்த இரண்டு வாரங்களில் நான் எடுத்த முடிவு தவறு என்பதை உணர்ந்தேன். மிகவும் தகுதி வாய்ந்த, படிப்பும் பட்டமும் திறமையும் பெற்ற உலகின் பெரும் நிதி நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலைக்காக அலைந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வணிகத்துறையில் ஒரு உயர்படிப்பு பட்டம் எனக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதை புரிந்துக்கொண்டேன். மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பினேன். என் குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சி. எப்படியோ சமாளித்து மிகவும் முயற்சித்து கடைசியில் சிறிய ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வரும் புதன் கிழமை அதில் சேரவேண்டும். அந்த நேரத்தில் தான் போன் மணி ஒலித்தது.
நன்றி: சந்தீப் கே. (நியூயார்க்) - இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழில் மொழிப்பெயர்த்தது: மஞ்சூர்ராசா)
Posted by
மஞ்சூர் ராசா
at
5:37 AM
9
comments
Links to this post
Friday, September 05, 2008
Tuesday, August 19, 2008
கொடுமையான மரணம்

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஹரீஸ் எனது பக்கத்து வீட்டிலிருக்கும் எனது இளமைக்கால நண்பரின் மகன்.
எப்படி இவ்வாறு நேர்ந்தது என்பதை யோசிக்கும் போது துயரம் கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது.
இந்த இளம் வயதில் இதுபோன்ற கொடுமையான இழப்பை என் நண்பனின் குடும்பம் எவ்வாறு தாங்கிக்கொள்வார்கள் என தெரியவில்லை.
ஹரீஸின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
Posted by
மஞ்சூர் ராசா
at
2:04 AM
14
comments
Links to this post
Monday, August 18, 2008
முசரஃப் பதவி விலகியது சரியா?

இதோ அதோ என்று ஒரு வழியாக பாகிஸ்தான் அதிபர் முசரஃப் பதவி விலகிவிட்டார்.
இது ஒரு விதத்தில் நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் தற்போது ஆட்சியிலிருப்பவர்களின் ஊழலை கணக்கெடுக்கும்போது பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமெரிக்காவின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் இருக்கும் என்று தெரியவில்லை. தற்போதைய அரசும் அமெரிக்காவை சார்ந்தே இருக்கும்.
இந்தியாவிற்கு மேலும் அதிக தலைவலி வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பேனசீரின் கணவரும், நவாஸ் செரீப்பும் விரைவில் முட்டிக்கொள்வார்கள் என்பதும் அரசல் புரசலாக தெரிகிறது.
மொத்தத்தில் தீவிரவாதிகள், தலிபான்களின் கை இனி ஓங்கும் என்றே தெரிகிறது.
இந்தியா இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Posted by
மஞ்சூர் ராசா
at
6:49 AM
2
comments
Links to this post
