Sunday, October 19, 2008

“எனது விசா முடிய இன்னும் பதினைந்து நாட்களே உள்ளது”

புதிய வேலைக்கும் சேர்வதற்கு முன்பு வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பகல் நேரத்தை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது தான் என் தொலைபேசி மணி அடிக்க ஆரம்பித்தது. ஒரு பெண் குரல் “இந்த செய்தியை சொல்வதற்கு வருந்துகிறேன் நீங்கள் வரும் புதன்கிழமை உங்கள் புதியவேலைக்கு சேரவேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலையில் எங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.” அடுத்த முனையில் தொலைபேசி வைக்கப்படும் சத்தம் கேட்டது. எனது எச்1பி விசா முடிய இன்னும் முப்பத்தி ஆறு நாட்களே உள்ள நிலையில் இந்த அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்க கூடாது ஆனால் என்ன செய்ய. என் மதிய உணவு தீண்டப்படாமல் ஆறி அவலாக மாற ஆரம்பித்திருந்தது.
செப்டம்பர் மாதம். என்னை சுற்றியுள்ளவர்களை போலவே நானும் கையிருப்பு குறைவதையும் நாட்கள் வேகமாக நகர்வதையும் தாள முடியாமல் இருந்தேன். வேலைக்கு எடுக்கும் பல இந்திய நிறுவனங்களை தொடர்புக்கொள்ள ஆரம்பித்தேன். பலரும் இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் புதிதாக மிகவும் திறமையான பலர் வேலைக்காக தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னும் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே எனக்கு விசா இருக்கிறது. முதன் முதலாக நேவார்க் விமான நிலையத்தில் நான் இறங்கிய 2005ம் வருடம் ஜூலை எட்டாம் தேதி அடிக்கடி நினைவுக்கு வருகிறது. பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த தினம் அது. ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் ஆலோசகர் பணியில் சேர்வதற்காக வந்திருந்தேன்.
ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடுமையாக உழைத்து நிர்வாகம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலான பலனை அவர்களுக்கு அளித்தேன். தொடர்ந்து உச்சநிலையில் இருந்தேன். மேலும் மேலும் கடுமையாக உழைத்தேன். எப்படியும் எனது எம்பிஏ பட்டப்படிப்பு மூலம் இன்னும் மேல்நிலைக்கு செல்லவேண்டும் என்பதே என் ஆசை.
மிக சில நாட்களிலேயே என்னை அனுப்பிய இந்திய நிறுவனத்திற்கும் எனக்குமான உறவில் (பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் ஏற்படும் விரிசல் ) ஏற்பட நான் அந்த நிறுவனத்தை விட்டு விலகினேன். என்னை நேரடியாக அந்த அமெரிக்க நிதி நிறுவனமே வேலைக்கு எடுத்துக்கொண்டது. மன்ஹாட்டனில் உள்ள ஸ்வாங்கிற்கு ஜாகை மாறினேன். ஆரம்பத்தில் சில நாட்கள் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களிலேயே மோசமான செய்தி ஒன்று தெரியவந்தது. ஆரம்பத்தில் அலுவலகத்தில் சிலரால் மட்டும் கிசுகிசுப்பாக பேசப்பட்ட அந்த செய்தி சில நாட்களில் எல்லோராலும் பேசப்பட்டது. ஆம். எங்கள் நிறுவனம் 2008 மார்ச் மாதம் விற்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர். என்னை போல ஒருசிலருக்கு மட்டுமே வேலை இருந்தது. எனது நெருங்கிய நண்பர் வேலை போனதால் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்.
நானும் உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும் என முடிவு செய்தேன். பல வணிகத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட்டின் மிக பெரிய நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக நஸ்டத்தினால் மூடப்பட்டுக்கொண்டிருந்தது. பிட்ஸ்பர்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்ததால் அங்கு இடம் மாறினேன்.
இங்கு வந்த இரண்டு வாரங்களில் நான் எடுத்த முடிவு தவறு என்பதை உணர்ந்தேன். மிகவும் தகுதி வாய்ந்த, படிப்பும் பட்டமும் திறமையும் பெற்ற உலகின் பெரும் நிதி நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலைக்காக அலைந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வணிகத்துறையில் ஒரு உயர்படிப்பு பட்டம் எனக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதை புரிந்துக்கொண்டேன். மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பினேன். என் குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சி. எப்படியோ சமாளித்து மிகவும் முயற்சித்து கடைசியில் சிறிய ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வரும் புதன் கிழமை அதில் சேரவேண்டும். அந்த நேரத்தில் தான் போன் மணி ஒலித்தது.

நன்றி: சந்தீப் கே. (நியூயார்க்) - இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழில் மொழிப்பெயர்த்தது: மஞ்சூர்ராசா)

9 comments:

said...

நல்லா கெளப்புறீங்க பீதிய...

Anonymous said...

Lots of Indian people facing this problem here in USA.

Radha

said...

:(

said...

//ஜே கே | J K said...
நல்லா கெளப்புறீங்க பீதிய...

//

:-o))

said...

////மிகவும் தகுதி வாய்ந்த, படிப்பும் பட்டமும் திறமையும் பெற்ற உலகின் பெரும் நிதி நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலைக்காக அலைந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வணிகத்துறையில் ஒரு உயர்படிப்பு பட்டம் எனக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதை புரிந்துக்கொண்டேன். ///

கசப்பான உண்மை
மொழிப்பெயர்ப்புக்கு பாராட்டுக்கள் நண்பரே

said...

எனக்கு இந்த விசா பிரச்சினை இல்ல.
இந்தியா-ல வேலை பக்கிரதில இது ஒரு சௌகரியம்.
ஆனாலும் சீக்கிரம் அடுத்த ப்ராஜெக்ட்-கு போங்க-னு டார்ச்சர் பண்றானுங்க, இதுல கொடுமை என்னடா-னா, நான் போன ப்ராஜெக்ட்-லேருந்து வெளியே வந்து மூணு நாளு கூட ஆகலை.

said...

சரியான நேரத்துலதான் மொழி பெயர்த்திருக்கீங்க!

said...

//எங்கள் நிறுவனம் 2008 மார்ச் மாதம் விற்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர்.//

திவாலா மார்ச் லேயே ஆரம்பமாகிவிட்டதா?அடக் கொடுமையே!

said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி