தேவையான பொருட்கள்:ஒரு முட்டை + இரண்டு அலைபேசிகள்
கீழே உள்ள படத்தில் காட்டியது போல ஒரு இணைப்பு உருவாக்கவும்
இரண்டு அலைபேசிகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தி 65 நிமிடங்கள் வைக்கவும்.
முதல் 15 நிமிடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.
25 நிமிடங்களுக்கும் பிறகு முட்டையில் சூடேற ஆரம்பிக்கும்
45 நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்றாக சூடாகிவிடும்
65நிமிடங்களுக்கு பிறகு முட்டையை உடைத்துப்பார்க்கவும்.
அது நன்கு வேகவைக்கப்பட்ட முட்டையாக மாறிவிடும்.
முடிவு: அலைபேசிகளின் மூலம் ஏற்படும் கதிர்கள் முட்டையிலுள்ள புரதச்சத்தை மாற்றும் தன்மையுடையது. நீண்ட நேரம் அலைபேசியில் பேசுபவர்களின் மூளையிலுள்ள புரதச்சத்து என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்
தயவு செய்து நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவதை தவிர்க்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.
"மூளை இல்லாத காதலர்கள் இது பத்தி கவலைப்பட தேவையில்லை"
பின் குறிப்பு: ஆங்கிலத்தில் எனக்கு வந்த இந்த செய்தியில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அலைபேசிகளை அதிகம் பயன் படுத்துவதில் கண்டிப்பாக ஆபத்து இருக்கிறது. மேல் விவரங்களுக்கு நண்பர் சாதிக் அலியின் கீழுள்ள பதிவை பார்க்கவும்.
http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_1570.html.
Tuesday, February 17, 2009
காதலர் தின ஸ்பெஷல்:அவிச்ச முட்டை செய்வது எப்படி?
Posted by
மஞ்சூர் ராசா
at
2:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அச்சச்சோ :O
இன்றைய தலைமுறைகளுக்குத் தேவையான தகவல்.சாலை விபத்தில் ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்துவது போல் இந்த விழிப்புணர்ச்சியும் அவசியமாக்கப் படவேண்டும்.இந்த பதிவை என் அனைத்து நண்பர்களுக்கும் திசை திருப்புகிறேன்.
65 நிமிஷம் வைப்பதற்கு பதிலா 10 நிமிஷம் அடுப்புல தண்ணியை வெச்சி வேக வைச்சிடலாமே!
அன்புள்ள நண்பரே இணையத்தில் ஏற்கனவே வலம் வந்த தகவல் இது.இதில் கூறப்படுவது போல் முட்டை வேகாது.நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்கள்.இல்லாவிட்டால் இந்த லிங்க் பாருங்கள்;http://www.snopes.com/science/cookegg.asp
உண்மையில்லாததை பரப்பி ஏன் எல்லோரையும் கலவரப்படுத்த வேண்டும்
ஆனால் மொபைல் ஃபோனில் ஆபத்து இருக்கிறது அது என்ன இங்கு பாருங்கள்;http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_1570.html.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஆங்கிலத்தில் வந்த தகவல் இது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என தெரியாது.
நண்பர் சாதிக் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
அவர் பதிவில் அலைபேசியினால் ஏற்படும் தீமைகளைப்பற்றி விவரமாக குறிப்பிட்டுள்ளார். நன்றி சாதிக்.
நன்றி ராசா நன்றி
இது பொய் என்றே நினைக்கிறேன்
அடடா...இதையெப்படித் தவறவிட்டேன்????
அண்ணே நீங்களா இப்படி?! :)
Post a Comment