Wednesday, December 14, 2005

என் பெயர் படும் பாடு!!!

எனது முழுப்பெயர் கலைவாணி,
ஆனா நா என்னை எல்லோருக்கும் கலை அப்படீன்னு அறிமுகப்படுத்துவேன். சும்மா ஒரு படம் காண்பிப்பதற்காக அல்ல. உதாரணமா அன்பே சிவம் படத்திலெ மாதவன் செய்யற மாதிரி (அன்பரசு – அர்ஸ்)… இது ஒரு நீண்ட வேதனைக் கலந்தக் கதை.
நான் இங்கு வந்தப் பிறகு பல விதங்களில் என் பெயர் உச்சரிப்பதை கேட்கத் தொடங்கினேன், இதில் வேதனைக்கலந்த உண்மை என்னான்னா எப்படி மாத்திப் போட்டாலும் என் பெயர் அருமையான அர்த்தங்கள் கொண்ட பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கிக் கொடுப்பதுதான்.
நான் முதன் முறையா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தப்ப எனது பேராசிரியர் எழுதியது:
அன்பு களவாணி (திருடன் - களவாணிப் பயலெ!)
சரி இது தட்டச்சு தவறா இருக்கும்னு விட்டுடலாம்…
அப்புறம் ஒரு வருசம் கழிச்சி, நான் ஒரு அலுவலகத்தில் பயிற்சிப் பெறுவதற்காக சேர்ந்தப் பொழுது அங்கிருந்தவர்கள் சேருவதற்கு முன்னாலெ ஒரு தேர்வு இருக்கு என்றனர்.
"ஹலோ கிழவாணியா பேசறது?"
"இல்லை நான் கலைவாணி!"
"ஓ , மன்னிக்கவும் களவாணி" (மறுபடியும்)
அதுக்கப்புறம் நா ஒரு முடிவு செஞ்சேன், நம்ம பேரு பெரிசா இருக்கறதனாலெ தான் இந்த மாதிரி பிரச்சனை, நாமளெ கலை அப்படின்னு வச்சிட்டா
… ஆனா கதை இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியலெ.
அதுக்கப்புறம் சமீபத்திலெ நா ஒரு புதிய அலுவலகத்தில் முழு நேர வேலையில் சேர்ந்தேன். முதல் நாள் அனைவருடனும் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மேலாளர்..."முதலில் அனைவரும் நம்முடன் இணைந்துள்ள புதிய நண்பரை வரவேற்போம்", "மிஸ் குலை" (வாழைக்குலை) குலைக்குலையாய் முந்திரிக்காய்) (கைத்தட்டல் தொடர்ந்து சிரிப்பு) (டேய் என்னங்கடா..எல்லாரும் சேர்ந்து விளையாட்றீங்களா?)
அன்னிக்கு ஆரம்பிச்சது…
ஒருமுறை எனது மேலாளருடன் ஒரு புதியப்பணியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பும்போது…
"சரி.. கலி… நீங்க இங்கெ எங்களுடன் வேலை செய்வது
சந்தோசமாக இருக்கிறது.(கலி முத்திப்போச்சு!..)
அது கலை (எனக்கு இதுத்தேவையா?)
ஓ.. காளி! (பத்ரகாளி)
ஹீ… ஹீ…. ரொம்ப நெருங்கிட்டீங்க (ப்போடாங்க்…)
அதுக்கப்புறம் நா எப்படியோப் போறங்கன்னு என் பெயரை சரியா உச்சரிக்க சொல்லிக்கொடுக்கறதெ முழுசா விட்டுட்டேன்."

பிறகு ஒரு நாள் காலை நேரத்தில் பணியிலிருக்கும் போது
"ஹேய், கிளை எப்படி போய்கிட்டிருக்கு? (மரக்கிளை)
நல்லா இருக்கு (சொல்லிட்டு திரும்பிட்டேன்..நமக்கு எதுக்கு இந்தப் பேர் திருத்தற வேலன்னுட்டு)
"இப்படித்தானே நீங்க உங்கப் பேரெ சொல்லுவீங்க?"
(ஆ..ஹா ஆரம்பிச்சுடாங்கய்யா…!!!)
"ஊ.. .. அது கலை"
"கொளாய்: (குழாய், குழாயடி சண்டை)(வேணாம்... சொல்லிட்டேன்….)
"கொலை?"
மறுபடியும் சொல்றேன், வேணாம்..... (அவனை கொலை செய்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன்.....)
"களை?" (களைப் பிடுங்குதல்)
(ஐயோ...தாங்கமுடியலெயே, வலிக்குது, இன்னும் கொஞ்ச நேரம் போனா அழுதுடுவேன்..)
"பழகினா, கொஞ்ச நாளிலெ உங்கப் பேர் எனக்கு வந்திரும்னு நெனைக்கிறேன் ஹா, ஹா",
டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, தமிழ்லெப் பாத்தா இரண்டே இரண்டு எழுத்துத்தாண்டா!!)
என்னடா…சந்திரமுகியிலெ தலைவர் "துர்கா" பேரெ தர்கான்னு நக்கலடிக்கிற மாதிரி…நம்ம பேர் ஆயிடுச்சுன்னு நெனைக்கும்போது …. எனது தோழி ஒரு புத்திசாலித்தனமான உபாயம் சொன்னாள்
அதாவது… எனது பேர் வர்ற மாதிரி வேறு வார்த்தையை சொல்லிச் சொல்ல சொன்னாள்.
அப்புறம் நான் கலைடாஸ்கோப் என்னும் வார்த்தையைச் சொல்லி (கலை வருது) என் பெயரெ எல்லோருக்கும் சொல்ல ஆரம்பிச்சேன்..
கலைடாஸ்கோப்பில் வரும் கலை... கலைடாஸ்கோப்பில் வரும் கலை...
இப்பவும் எல்லோரும் ஒழுங்கா சொல்றதில்லெ. அவங்க சொல்றாங்க கலாய்(கலாய்க்கிறது, கலாய் பூசறது)
"ஹேய் கலாய்!!?
"யா?"
ச்சும்மா உன் பேரெ சொல்லிப் பார்க்கலாமென்னுட்டு…
ஹா..ஹா…ஹா..
ஓஹோ.. ரொம்ப நல்லா இருக்கு (தூத்தெறி…)

ஏதோ வாந்தி எடுக்கிற மாதிரி இருந்தாலும் வாழ்க்கை அமைதியா ஓடிட்டிருந்தது, ஆனா ரொம்ப நாளுக்கப்புறம் திடீர்னு ஒரு நாள்… என்னுடைய கணினியில் இணைய தொடர்பு செயலிழந்துவிட்டது…அதனாலெ நான், வாடிக்கையாளர் உதவியை அணுகினேன் (என் போறாத காலம், அது சென்னையிலிருக்கும் ஒரு அழைப்பு நிலையத்திற்கு (Call Center!) போயிறிச்சி)
எனக்கு இந்த விசயம் தெரியலெ அதனாலெ நா அமெரிக்க உச்சரிப்பிலெ பேச ஆரம்பிச்சேன்..
"உங்கள் பெயர் மேடம்
"கலை"
"என்ன, திரும்பவும் சொல்லுங்கள் மேடம்
"கலை… கலைடாஸ்கோப்பில் இருப்பதுப்போல"
"எனக்கு சரியாகப் புரியவில்லை மேடம், உங்க தொடர்பு எண்ணைக் கொடுத்தால் நான் கோப்பில் பார்க்கிறேன்..."
(ஸ்… எண்ணைக் கொடுத்தேன்)
"ஹோ… கலைவாணி, சரியா" (ஒரு மாதிரி நக்கலானக் குரலில்… )
(அட பாவி மக்கா… நீ நம்மூரா??!! அமெரிக்கா உச்சரிப்பை நிறுத்திவிட்டு
நம்மூர் உச்சரிப்பில்..)
அந்தப்பக்கம் என்ன நினைக்கிறாங்கன்றது எனக்கு நல்லா தெரிஞ்சது…. பேரெ பாத்தா
"உர்ஸ் பாம்மிங்லி" ன்னு போட்ற மாதிரி இருக்கு
… ஸீனெப் போட்றது மட்டும் பிரின்ஸஸ் டயானா ரேஞ்சு க்கா!!!
"அண்ணா… சத்தியமா நா அந்த மாதிரி இல்லீங்கண்ணா!!!"

கலைவாணியின் ஆங்கில வலைப்பூவிலிருந்து (நன்றி)

5 comments:

said...

அய்யா மொழிபெயர்ப்பு திலகமே...
கலக்கல். கலவானி பாத்தா இன்னும் சந்தோசோப்படுவாங்க.

இப்படிக்கு,
'அம்பு'

Anonymous said...

அதுதான் என்கிறது 3 பேயர் வைத்திருக்கவேண்டும் என்று! மூண்றில் ஒண்றை சர்வதேசத்துப்பெயராய் வரும்மாறு பாத்துக் கொள்ளுங்கள்!! இதுவும் ஒருவகையில் உலகமயமாக்கல்தான்!!!

சேதுக்கரசி said...

சூப்பர்! இத நம்ம குழுமத்துல போடுங்க!

said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க :)))

said...

கலைவாணி என்னும் அழகிட தமிழ் பெயரைக் கொலை செய்வார்கள் - தவறு அவர்களுடையது அல்ல. அயலகத்தில் அவர்களது உச்சரிப்பில் அவர்கள் பெயரை நாம் உடனே க்ற்றுக் கொள்கிறோம் - அவ்வளவு ஆர்வம் நமக்கு - ஆனால் அவர்களோ .....