2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்
1.தெரியாத்தனமாக உங்களது கடவு சொல்லை (பாஸ்வோர்ட்) மைக்ரோவேவில் தட்டச்சுவீர்கள்
2. ஸொலிட்டையர் (சீட்டு விளையாட்டு) ஆட்டத்தை உண்மையான சீட்டுக்கட்டை வைத்து விளையாடி பல வருடங்களாகியிருக்கும், அல்லது விளையாடியே இருக்க மாட்டீர்கள்.
3. மூன்று பேருள்ள உங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள குறைந்தபட்சம் பதினைந்து தொலைபேசி எண்களை வைத்திருப்பீர்கள்.
4. உங்களுக்கு அடுத்த இருக்கையில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பருக்கு மின்மடல் (இமெயில் ) அனுப்புவீர்கள்.
5. உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அடிக்கடி உங்களால் தொடர்புகொள்ள முடியாததற்கு காரணம் அவர்களுக்கு மின் முகவரி (இமெயில் அட்ரஸ்) இல்லெயென்று சொல்வீர்கள்.
6. வீட்டிற்கு வண்டியில் போகும்போது அலைபேசியில் வீட்டை கூப்பிட்டு நீங்கள் வாங்கிகொண்டு போகும் சாமன்களை வீட்டிற்குள் கொண்டு செல்ல உதவிக்கு ஆள் அனுப்ப சொல்வீர்கள்.
7. தொலைக்காட்சியில் வரும் எல்லா விளம்பரங்களுக்கு கீழ் அந்த நிறுவனத்தின் இணைய முகவரி இருக்கும்.
8. வீட்டை விட்டு வெளியில் போகும் போது அலைபேசியை மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் மிகவும் கலவரமடைந்து, உடனே போய் அதை எடுத்து வருவீர்கள் (உங்கள் வாழ்க்கையில் முதல் 20 அல்லது முப்பது வருடங்களாக ஏன் 60 வருடங்களுக்கும் மேல் அலைபேசி என்ற ஒரு கருவியே இருந்திருக்காது என்பது வேறு விசயம்)
10. காலையில் எழுந்து காப்பி குடிப்பதற்கு முன் ஆன்லைனுக்கு போய்விடுவீர்கள்
11. நீங்கள் இதை படித்து தலையை குலுக்கிக்கொண்டு சிரிப்பீர்கள்
12. அதெ விட மோசம், இதை யார் யாருக்கு அனுப்பணும்னு சரியா முடிவு செய்திருப்பீர்கள்
13. நீங்க ரொம்ப பிஸியா இருக்கறதனாலெ இங்கெ #9 இல்லேங்கறதெ கவனித்திருக்க மாட்டீர்கள்.
14. இப்பொழுது நீங்கள் திரும்பவும் மேலே போய் #9 இருக்கா இல்லையான்னு சோதித்துப் பார்ப்பீர்கள்.
15. இப்ப உங்களெ பாத்து நீங்களே சிரிப்பீங்க
போங்க, இதெ உங்க நண்பர்களுக்கு அனுப்புங்க.
அதெ தானெ இப்ப செய்ய போறீங்க!
நன்றி: நிலா
Monday, May 29, 2006
2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்
Posted by மஞ்சூர் ராசா at 5:55 AM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வணக்கம் மஞ்சூர் ராஜா!
எழுத்தாளர் சுஜாதா வின் கற்றதும் பெற்றதும் விகடன் தொடரில் ஒராண்டுக்கு முன்னர் இது போன்று பட்டியல் இட்டுள்ளார்,இது தற்செயலா ,இல்லை தழுவலோ அல்லது ஒத்த கற்பனையோ தெரியவில்லை!(great men thinks alike!) ஆனாலும் இங்கு கூறியவை விஞ்ஞானதின் வீச்சு எந்த அளவு மனிதனிடம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்றே காட்டுகிறது!
சுவாரஸ்யமான விஷயங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்!
அன்பு வவ்வால்
நான் சுஜாதாவின் எழுத்தை பார்க்கவில்லை. இது சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது. நான் ஆங்கிலத்திலிருந்ததை தமிழில் எனக்கு தெரிந்த அளவிற்கு மொழிப்பெயர்த்துள்ளேன்.
நன்றி.
அன்பு சர்தார்
மிகவும் நன்றி.
இவை மின்னஞ்சல்களில் வந்து இம்சிப்பவை, ஒளிந்திருக்கும் உண்மையையும் தாண்டி :)
Mansoor Raja,
Thanks for coming and posting your comments in my blog . and thanks again for posting my story in your group. Please gimme the url also
regards
Jeevaa
முதல்ல நீங்க பிளாக் துவங்கி ஒரு வருடம் ஆனதுக்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த #9, அத நீங்க சொன்ன மாதிரியே மேல போய் பாத்த ஹை-டெக் ஆசாமி நான்
பிரசன்னா
அன்பு பிரசன்னா, நீங்கள் சொல்லித்தான் இன்று நான் வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் ஆனது தெரியும். ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.
இங்கு வந்ததற்கும் மிகவும் நன்றி.
அன்பு குப்புசாமி, உங்கள் வருகைக்கு நன்றி.
அன்பு ஜீவ்ஸ்,
இந்த பக்கம் வந்ததற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
really
தமிழில் படிப்பது சுவை தனிதான் அண்ணா. அழகான மொழி பெயர்ப்பு. உங்களுக்கு ஒரு பட்டப் பெயர் சூட்ட வேண்டுமே.. யோசித்து சொல்கிறேன்..
நான் ஏமாறவில்லை..உங்கள் தங்கை ஆயிற்றே:)
Post a Comment