ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று நான் பெரிய பணக்காரன். என்னை கல்யாணம் செய்துக் கொள்கிறாயா என்று கேட்பது நேரடியாக சந்தைப்படுத்துதல்.(Direct Marketing)
நீங்கள் ஒரு விருந்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிருக்கும்போது ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களில் ஒருவர் அவளிடம் சென்று உங்களை காண்பித்து அவர் மிகப்பெரிய பணக்காரர். அவரை திருமணம் செய்துகொள் என்று சொல்வது – விளம்பரம் (Advertisement)
நீங்கள் ஒரு விருந்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் உங்கள் உடையை ஒரு முறைப் பார்த்து, கழுத்துப் பட்டையை (Tie) நேராக்கி, தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு பிறகு அவளிடம் சென்று வணக்கம் சொல்லி அவளுக்கு குளிர் பானம் ஊற்றி கொடுத்து, அவள் செல்கையில் வாசல் கதவை அவளுக்காக திறந்து வைத்து, அந்த நேரத்தில் அவளுடைய கைப்பை தவறுதலாக கீழேவிழும் போது (பொதுவாக இது நடக்கும்) அதை அவளுக்கு எடுத்து கொடுத்து, அவளை வீட்டில் கொண்டு விடவா என்று பணிவுடன் கேட்டப்பின் மெதுவாக அவளிடம் நான் ஒரு செல்வந்தன், என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா என்று அவளிடம் கேட்பது – பொதுஜன தொடர்பு (Public Relations)
நீங்கள் ஒரு விருந்தில் இருக்கும்பொழுது ஒரு அழகானப் பெண் உங்களிடம் வந்து நீங்கள் மிகப் பெரிய பணக்காரர், உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்வது – உங்கள் தயாரிப்பு சந்தையில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதாகும் (Brand Recognition).
நீங்கள் ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று, நான் பணக்காரன், என்னை திருமணம் செய்து கொளகிறாயா என்று கேட்கிறீர்கள். அவள் உடனே உங்கள் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை கொடுப்பாள். இதற்கு பெயர் உங்கள் தயாரிப்பைப் பற்றிய வாடிக்கையாளரின் அபிப்ராயம். (Customer's Feedback)
உங்களுடைய அபிப்ராயங்களும் வரவேற்கப்படுகின்றன.
8 comments:
சந்தைப்படுத்துதலை எளிமைப்படுத்திட்டீங்க...
//உங்களுடைய அபிப்ராயங்களும் வரவேற்கப்படுகின்றன. //
அந்த feedback அ வாங்கின அப்புறமும் இப்படி feedback கேக்கறீங்களே ஒங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.:-)
இதை படிச்சீங்க..?
பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
கொங்கு ராசாவும் ஏற்கனவே இந்த கட்டுரையை தமிழ் படுத்தி எழுதியிருக்கிறார். அதை நான் கவனிக்கவில்லை. எனக்கு வேறொரு நண்பர் ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தார்.
கொங்கு ராசாவுக்கு வாழ்த்துக்கள்.
மன்சூர் ராசா, அருமையான பதிவு. சிரிக்க வைத்து சிந்திக்க வைத்துவிட்டது.
கான் வித் த விண்ட் காலம் போல் தலை கோதி,கார் கதவு திறந்து, fஃஈட் பாக்,வரும் என்று வெயிட் செய்வதே நல்லது.
தமிழ் அறிமுகத்துக்கு நன்றி.
மிகவும் பிடித்தது -> Customer Feedback
நல்ல இருக்கு அண்ணா:)
இந்த மாதிரி ஒரே சமயத்துல நாலஞ்சு பொண்ணுங்க கேட்டா என்ன பதில் சொல்லனும்...ஆன்ஸர் ப்ளீஸ்...
நாலஞ்சி பொண்ணுங்க ஒண்ணா வராத மாதிரி பாத்துக்கவேண்டியது உங்களோட திறமை...
புரிஞ்சிக்கமாட்டேங்கறீங்களே...
Post a Comment