Wednesday, July 05, 2006

விசா

இந்தியாவில் நஸ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ இறைச்சி மட்டும்தான் கிடைத்து வந்ததால் அது மிகவும் நொந்துபோய் இருந்தது.
ஒரு நாள் அங்கு வந்த அமெரிக்காவிலிருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலையின் மேலாளர் அந்த சிங்கத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும்படி நிர்வாகத்திடம் சொன்னபோது அந்த சிங்கம் ஓ எனது பிரார்த்தனை பலித்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால் அருமையான குளிர் சாதனம் பொருத்தப்பட்டட அறையில் தங்கலாம், தினமும் ஒரு முழு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் கூட சாப்பிட கிடைக்கும். அதுவும் அல்லாது அமெரிக்காவிற்கான பச்சை அட்டையும் (கிரீன் கார்ட்) கிடைக்கும் என்று கணக்குப் போட்டது.

அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த முதல் நாள்அந்த சிங்கத்திற்கு காலையில் அருமையாக கட்டப்பட்ட ஒரு பெட்டியில் உணவு வந்தது.

சிங்கம் ஆவலுடன் வேக வேகமாக அந்த பெட்டியைத் திறந்துப் பார்த்து அதில் சில வாழைப்பழங்கள் மட்டும் இருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்தது.
ஓ நான் இப்பத்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கேன், அதனாலெ என்னெ நல்லா கவனிக்கணும்ங்கற எண்ணத்திலெ எனக்கு ஏதாவது வயிறு கோளாறு வரக்கூடாது அப்படீன்னு நினைச்சி வாழைப்பழம் கொடுத்திருக்காங்க போலிருக்கு என்று நினைத்தது.

அடுத்த நாளும் முதல் நாள் போலவே நடந்தது. மூன்றாவது நாளும் அதே வாழைப்பழப் பெட்டி வந்ததும் அந்த சிங்கத்தினால் தாங்க முடியவில்லை.

பெட்டியை கொண்டுவந்த பையனை தடுத்து நிறுத்தி கோபமாக உனக்கு தெரியாதா, நான் சிங்கம்னு, காட்டுக்கே ராஜா! உங்க நிர்வாகம் என்ன நினைச்சிகிட்டு இருக்காங்க, கொஞ்சம் கூட அறிவில்லாமெ இருக்காங்க? எனக்கு எதுக்கு வாழைப்பழத்தை தினமும் கொண்டுவர்றே? என்று கேட்டது.

அந்தப் பையன் மிகவும் பணிவாக, ஐயா, எனக்கு தெரியும் நீங்க காட்டுக்கே ராஜாங்கறது. ஆனா நீங்க இங்கே வந்திருக்கறது குரங்குக்கான விசாவில் என்றான்.

வெளிநாட்டில் குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருக்கலாம்.


நன்றி: வினோத்

10 comments:

said...

வெளிநாடு போய் பணம் சம்பாதிப்பது கிண்டல் அடிக்க பட வேண்டிய ஒன்றல்ல. இங்கேயே சிங்கமாக இருக்கலாம் என்றுள்ளீர்கள். வெளிநாடு போய் அங்கே சக்கை போடு போடுபவர்களை நான் பார்க்க தான் செய்கிறேன். இந்தியாவில் ஒரு தொலை மாநிலம் வேலை செய்வது போல தான் இதுவும்.

said...

சூப்பரப்பு!


பா. க., இந்த ஜோக் மற்று விசாவில் வருபவர்களைக் குறித்து!
அந்தக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க வேண்டும்!

said...

என்னய்யா ஒப்பீடு இது.
என்னமோ இந்தியாகாரன் மட்டும்தான் வெளிநாட்டில வேலை பாக்கறானா?
அவனவன் சூழ்நிலை. அதுக்காக அம்மா ரேஞ்சுக்கு குட்டிக்கதை எல்லாம் ரொம்ப ஓவர்

அன்புடன்
தம்பி

said...

அன்பு பாலாசந்தர், மற்றும் தம்பிக்கு இந்தக் கதையில் உள்ள முக்கிய விசயம் ஏமாந்து போகக்கூடாது என்பது தான். எனக்கு தெரிந்து ஒரு நண்பர் பொறியியல் படித்தவர், வீட்டு வேலைக்கான விசாவில் குவைத் போய் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பள்ளி வாசலில் கிடைக்கும் சாப்பாட்டை எத்தனையோ முறை வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இது ஒரு சின்ன உதாரணம் தான். இது போல ஏகப்பட்ட பேர் வெளிநாடு போகும் ஆசையில் பணத்தை இழந்து மோசமான வேலைகள் செய்வதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இப்பவும் இது நடக்கிறது. நல்ல முறையில் சரியான நிறுவனத்திற்கு போய் நன்றாக சம்பாதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இப்படியும் பலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

கடைசியா ஒண்ணு, நானும் 16 வருஷமா வெளிநாட்டில் தான் குப்பைக் கொட்டிகிட்டிருக்கேன்.

அடிக்க வராதீங்கப்பா....

said...

sk நீங்க சொல்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கவேண்டும்.

said...

\\கடைசியா ஒண்ணு, நானும் 16 வருஷமா வெளிநாட்டில் தான் குப்பைக் கொட்டிகிட்டிருக்கேன்.\\

அய்யோ பாவம்!!!

நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேனா?

Anonymous said...

ம்ஞசூர் உங்கள் வலைபதிவு நன்றாக உள்ளது.இன்றுதான்பார்த்தேன் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
நட்புடன்
நம்பிக்கை பாண்டியன்

said...

குட்டி கதை பழைய சரக்காக இருந்தாலும் புதுக்கடையில் நன்றாகதான் இருக்கு. யாரோ தெரிந்தவர் பொறியல் படித்துவிட்டு பொறியல் செய்துக் கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். அது அவருடைய தவறு படித்தவரே ஏமார்ந்தால் மற்றவர்கள் எப்படிங்க? சரி ஆறு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் வந்து சேருங்க.
http://jazeela.blogspot.com/2006/07/blog-post_09.html

said...

இதனால் பெறப்படும் நீதி என்னவெனில், எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கம் வறுத்த வேர்க்கடலையைத் தின்னாது.

இது ஒரு வருஷத்து பழசுங்க!

http://www.islamkalvi.com/story/monkey_visa.htm

Anonymous said...

கதைக்கரு மிக்க ஆழமானது. நன்றி

[அடிப்படைத்தகவல் தேனீக்கள்]