Thursday, January 10, 2008

தொடரும் அவஸ்தைகள்

நேற்று பயங்கர குளிரில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (குளிர் மட்டுமல்ல, மணல் தூசியும் பனிமூட்டமும்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டருகில் வந்தோம்.

"மாமோவ் காரை நிறுத்துங்க"

"ஏன், என்ன ஆச்சி:

"நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் கோலங்கள் பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ"

மறுத்துப் பேச முடியுமா நான்.

"ம்ம், சரி, சீக்கிரம் வந்துரு." (இதற்கு மேல் பதில் சொன்னால் என்ன நடக்கும்னு தான் எல்லோருக்கும் தெரியுமே!)

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும், வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது

"ஹலோ, அண்ணா, நா பிரசாத்ணா, "

“சொல்லு”

"ஒரு முக்கியமான விசய்ம்ண்ணா, நீங்க வீட்லெதானெ இருக்கீங்க"
(இதை விட ஒரு மடத்தனமான கேள்வி இருக்க முடியுமா?)

"ஆமா என்ன விசயம்?"

"இல்லெண்ணா நான் நேரில் வந்து பேசறேன்!”

"சரி வா"

பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி.

"அண்ணா நாந்தான் பிரசாத்!"

"??!!??"

"அண்ணா உங்க வீட்டிலெ கோலங்கள் வருதா அண்ணா?"
"இல்லெ"
"அப்படியா, அக்கா எங்கே?"
"தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?"
"அது ஒண்ணுமில்லெண்ணா, கோலங்கள் பாக்கணும்னுதான்!"
பேசி வைக்கப்பட்டது.
(என்ன கொடுமை சிவா இது!)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம். எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.

"அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெ வர்தா?"

டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.

என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன்.
மீண்டும் அலைபேசி அடிக்கும் சத்தம்
"ஹலோ அங்கிள் நா ரீத்து பேசறேன், உங்க வீட்டில் சன் டீவி வருதா?"

"ஆமம்மா ஏன்"

"இல்லே அம்மா வெளியில் போயிருக்கா, என்னெ கோலங்களெ ரிகார்ட் செஞ்சி வைக்க சொன்னா, எங்க வீட்லெ வரலெ, நீங்க கொஞ்சம் ரிகார்ட் செய்து கொடுக்கறீங்களா" (இந்த பெண் பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறது வீட்டில் என்பது வேறு விசயம்)

"எங்க வீட்லெ ரிகார்ட் செய்ய முடியாதம்மா, ரிகார்டர் சரியா வேலை செய்யலெ"

"சரி அங்கிள்"

என் நிலைமையை பாருங்கள். கொஞ்ச நேரம் தூங்க விடாமல்... போதுமடா சாமி....

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று மெதுவாக...

"என்ன ஆச்சு?"
"க்ளைமாக்ஸ் சரியில்லீங்க" அதுக்குள்ளெ தொடரும் போட்டுட்டாங்க (?!)

அப்பாடா! ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்

இரவு சாப்பாடு நேரத்தில், கொஞ்சம் சாம்பார் ஊத்து....
அப்போது ...மீண்டும் ஃபோன் மேல் வீட்டிலிருந்து. ஃபோனை எடுத்த என் மனைவி கோலங்களின் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
நான் சாம்பார் வரும் என ஆறிப்போய்க்கொண்டிருக்கும் இட்லியை பார்த்துக்கொண்டு ”ஙே” என விழித்துக்கொண்டிருக்கிறேன்....

அட நீங்களுமா?

17 comments:

said...

mmmmm"கோலங்கள்" கதையை இனிமேல் உங்க கிட்டே இருந்து தெரிஞ்சுக்கலாம், அது சரி, நிஜமாவே நல்லா இருக்கா என்ன அந்த சீரியல்?

said...

ஏங்க, டீவி சீரியல்கள் அந்த அளவுக்கா படுத்துது உங்க ஊர்லயும்...

said...

இவங்கெல்லாம் மாறவே மாட்டாங்களா?

கோலத்தால பலர் வாழ்க்கை அலங்கோலம் ஆகிடும் போலவே!...

said...

இந்த தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போடாமல் இன்னமும் இயங்கிக்கொண்டிருப்பதெப்படி? 'கிளிசரின்' போட்டு நாயகிகள் அழுகிறார்களோ இல்லையோ... அதற்குச் செலவழியும் காசை எண்ணி நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அழுதிருக்க வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கியவுடன் எங்கிருந்தோ கண்ணீர் வெள்ளம் பெருகிவந்து காலை நனைக்கிறது. ஏதாவது ஒரு 'சானலில்' யாராவது அழுதுகொண்டேயிருக்கிறார்கள்.

said...

ஏதாவது பார்ட் டைம் வேலை இருந்தால் கோலங்கள் டைமுக்கு சேர்ந்து கொள்ளுங்கள் ஏனென்றால் இந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்க வேறு வழியேயில்லை!!!!!!!!!!!
அருணா

said...

கோலங்கள் இயக்குனர் திருச்செல்வம் வந்து இந்த பதிவை வாசிக்க வேண்டும் என்பதே எனது ஆசை! அப்பவாவது இந்த தொடரை முடிக்கிற வழியைப் பார்ப்பாரா ???

அண்ணா! நல்லா இருக்கு உங்கள் பதிவு. இதை அண்ணி படித்தார்களா இல்லையா? அண்ணி படித்த பின் நடக்கும் நிகழ்வுகளில் அடுத்த பதிவு எழுதலாம் அல்லவா? ;)

(எழுதுவீர்களா? ;)...)
அன்புடன்
சுவாதி

said...

இந்த த்ரெட் இங்க வேற ஓடிகிட்டிருக்கா!!

வந்துட்டேன்!!

said...

//
J K said...

கோலத்தால பலர் வாழ்க்கை அலங்கோலம் ஆகிடும் போலவே!...
//
ரிப்பீட்டேய்

said...

இதுக்கு நான் என்ன சொல்லனும் ஆங் "Many more returns of that day"

:-)))

said...

கீதா மேடம் சென்னையிலிருந்துக்கொண்டு கோலங்கள் பார்க்கவில்லை என்று சொல்வது பனைமரம் கள் கதையை நினைவுப்படுத்துகிறது.

said...

சுந்தர், எங்க ஊரில் மட்டுமல்ல எல்லா தமிழர்கள் இருக்கும் ஊர்களிலேயும்.

said...

தமிழ்நதி,

தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் தான் மிகவும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதனால் தான் ஏழு நாட்களில் முடியக்கூடிய தொடரை ஏழு வருடங்களுக்கு இழுக்கிறார்கள்.

மார்க்கெட் போன திரைப்பட நாயகிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே தொடர்கள் தான்.

said...

அருணா இந்த பதிவு எழுதிய இரண்டு நாட்களுக்கு பின் எங்கள் வீட்டில் சன் தொலைக்காட்சி வருவதில்லை. அதனால் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

said...

ஸ்வாதி

திருச்செல்வம் தனது திறமையை இப்படி வீணடிக்கிறாரே என்ற ஆதங்கம் இருந்தாலும் காசு பண்ண இதை விட சிறந்த வழி வேறென்ன இருக்கிறது, மேலும் இவற்றை பார்ப்பது தானே நம் மக்களின் அன்றாட வேலை.

said...

சிவா,

கோலத்தால் மட்டுமல்ல பல தொலைக்காட்சி தொடர்களினாலும் பல வீடுகளில் அன்றாடம் பிரச்சினைகள் தான்.

said...

ஜேகே, போன வாரம் ஊருக்கு போயிருந்தப் போது இந்த கொடுமைகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?

said...

இப்படியெல்லாமா விடாம பார்க்குறாங்க? கலிகாலமப்பா... :)