Sunday, May 25, 2008

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு உங்களுக்கு பிடிக்கவில்லையா?

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு உங்களுக்கு பிடிக்கவில்லையா?

இன்று ஒரு மாறுதலுக்காக பிட்சா சாப்பிடுவோமா?



வேண்டாமா? சரி, பாஸ்தா?


அதுவும் வேண்டாமா ?? .. டாக்கோ நல்லா இருக்குமே?



என்ன இன்னிக்கி டாக்கோ சாப்பிடும் எண்ணம் இல்லையா ? ... சரி.. இந்த மெக்ஸிகன் உணவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



அதுவும் வேண்டாமா? பரவாயில்லை, இன்னும் நெறைய உணவு வகைகள் இருக்கு.....
ம்ம்ம் சைனீஸ்???????



பர்கர்ஸ்????????



சரி சரி இந்திய உணவு தான் வேண்டுமா?

ஏதேனும் இனிப்பு வகை சாப்பிடலாமா?



தென்னிந்திய உணவா?

இல்லே! வட இந்திய உணவா?



வேண்டாத உணவு எனப்படும் ஜங்க் புட் பத்தி என்ன நினைக்கிறீங்க?



அல்லது பத்திய உணவா??



நீங்கள் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், முடிவே இல்லை!

சிற்றுண்டி?



அசைவம்?



பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு



அல்லது கொஞ்சம் கோழி வறுவல்

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், அல்லது எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்து பார்க்கலாம்...

ஆனால்..

இவர்களால் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது...

இவர்கள் உயிருடன் இருப்பதற்காக கொஞ்சம் உணவு இருந்தால் போதும்






அடுத்த முறை இந்த உணவு சரியில்லை என்று குப்பையில் கொட்டுவதற்குமுன் ஒரு முறை இவர்களை பற்றி கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்!!



இந்த சப்பாத்தி கல்லு மாதிரி இருக்கிறது என அடுத்தமுறை சொல்வதற்குமுன்கொஞ்சம் யோசித்து பாருங்கள்


இவர்களை போல ஆயிரமாயிரம் குழந்தைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்



தயவு செய்து உணவை வீணாக்காதீர்கள்

"வணங்கும் உதடுகளை விட உதவும் கரங்களே சிறந்தவை"

மேலும் விவரங்களுக்கு: http://www.childlineindia.org.in/

நன்றி

மஞ்சூர் ராசா


(ஆங்கிலத்தில் வந்த மடல்)

15 comments:

said...

சிறந்த பதிவுமட்டுமல்ல சிந்திக்க வேண்டிய பதிவும்..ஹோட்டலக்ளில் கல்யாணம் போன்ற விசேஷங்களில் எவ்வளவு உணவை வீணாக்குகிறோம்?
இனி சாப்பிடும்போதெல்லாம் இந்த நினைவு வரும். நன்றிமஞ்சூர்ராசா

said...

மஞ்சூர் ராசா பக்கவான பதிவு போட்டுடீங்க போங்க....

இது அனைவரும் உணர்ந்து செய்ய வேண்டிய ஒன்று. தேவையான அளவு சாப்பாடை வைத்து கொண்டாலே பெருமளவு சேதம் தவிர்க்கப்படும்.

முதல் பாட்டியின் கண்கள் 1000 கதைகள் சொல்கின்றன. கடவுளுக்கு அபிஷேகம் என்ற பெயரில் லிட்டர் கணக்கில் பாலும் மாற்ற சங்கதிகளும் ஊற்ற படும் போதெல்லாம் எனக்கு இந்த நினைவு வரும். அடப்பாவிகளா! (சில சமயங்களில் நானும் இதை செய்து இருக்கிறேன்) இப்படி அநியாயமா கீழே ஊற்றுகிறார்களே? ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டபடுவர்கள் இருக்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவை தானா....நம்மை எல்லாம் கடவுளா வந்து இப்படி செய்ய சொல்கிறது என்று.

யாருக்கும் சாப்பாட்டை வீண் செய்யும் போது அதன் அருமை புரியாது, அவர்கள் என்றாவது சாப்பாட்டுக்கு கஷ்டப்படும்போது மட்டுமே இதன் அருமை புரியும். அதுவரை எதாவது ஒரு நாள் வீண் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு பிறகு அதை அதோடு மறந்து விடுபவர்களே அதிகம்.

said...

நெஞ்சைத் தொடும் பதிவு மஞ்சூர் அண்ணா:)

said...

'என்னடா இது முடிவில்லாம படமா போயிகிட்டே இருக்கே. இது மஞ்சூரார் ஸ்டைல் இல்லியே'
அப்படீன்னு யோசிச்சுகிட்டே கீழே போனா ஒரே அடி. ஜெயசூர்யா சிக்ஸர்!!
வின்னர் மஞ்சூர் அண்ணாதான். :))
நல்ல மெஸேஜ்.

said...

ஷைலஜா வருகைக்கு நன்றி.

முடிந்தவரை நாம் உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருந்தாலே பல நன்மைகள் ஏற்படும்.

said...

அன்பு கிரி வருகைக்கு நன்றி.

கோயில்களில் அபிஷேகம் என்றப்பெயரில் வீணாக்கும் பொருட்களை நினைத்தால் மிகவும் வேதனைதான் மிஞ்சுகிறது.

said...

அன்பு ரசிகன்

இந்த பதிவு ஆங்கிலத்தில் எனக்கு வந்த ஒரு பதிவு. மனதை தொட்டதனால் தமிழில் மொழிப்பெயர்த்தேன்.

இதன் மூலம் ஏதேனும் நன்மை கிடைத்தால் அதுவே பெரிய விசயம்.

said...

அன்பு கபீரன்பன்

இந்த செய்தி உங்களையும் யோசிக்கவைத்திருந்தால் அதுவே பெரிய ஒரு நன்மை.

Anonymous said...

ஏன் இந்த வில்லத்தனம் ;))

said...

மனதைத் தொட்ட பதிவு. சூப்பருங்க. எங்கக்கா அவங்க பையன் சாப்பாட்ட தொடர்ந்து வீணாக்கினப்போ ஒரு நாள் அவனை கூட்டிகிட்டு போய் இவங்களை எல்லாம் காண்பிச்சு, இந்த குழந்தைகளை பார் முடிந்தால் இவங்களுக்கு உதவி செய்,இல்லைனா இவங்க சாப்பாட்ட திருடாதேன்னங்க. அவன் புரியாம பார்த்ததும், நீ வீணாக்கறதும் திருடறதும் ஒரே மாதிரி குற்றம்னு சொல்லவும், அன்னைலேர்ந்து அவன் எதையுமே வீணாக்கரதில்லை.

said...

என்னடா இது மொக்கைப் பதிவோன்னு நினைக்கையிலே கடைசியில் மனதை நெகிழச் செய்து விட்டது இந்தப் பதிவு....
அன்புடன் அருணா

said...

நல்ல பதிவு. உணவை வீணாக்காமல் தேவையுள்ளோருக்கு கொடுத்துதவலாம்.

said...

சிறந்த பதிவுமட்டுமல்ல சிந்திக்க வேண்டிய பதிவும் கூட.

said...

Very good message Mr. Majoor Raasaa. Heartfully thank u to stimulate more kindness to each and everyone from this message. Please add these people with cats & dogs like pets. Once more thanks brother...

said...

Wonderful Article. Thanks