Tuesday, June 17, 2008

குவைத்தில் பயங்கர புழுதிப்புயல்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான புழுதியும் வெயிலும் சூழ்ந்திருக்கும் குவைத்தில் இன்று காலை புழுதியின் தாக்கம் மிகவும் அதிகமாகி விட்டது.

இன்று காலை ஏழு மணிக்கு எடுத்த புகைப்படங்கள் இவை. இன்று இரவுக்குள் குவைத்தை மிக பயங்கரமான புழுதிபுயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆகும் என்று தெரியவில்லை. (பலருக்கும் தூசியினால் பலவகை பட்ட வியாதிகள் வந்திருக்கின்றன)





9 comments:

said...

முதல் படம், சில மாதங்களுக்கு முன்பு யாரோ சுனாமி வந்த போது எடுத்த படம் என்று போட்டிருந்தார்கள்,நீங்கள் என்னடா என்றால் புழுதி என்கிறீர்கள். :-)
கொடுமையாக இருக்கு.

said...

எல்லாமே நீங்கள் எடுத்த படங்களா? புகைப்படங்களில் ரியாலிட்டி அதிகம்.

said...

அண்ணே! பார்த்து பத்தரமா இருங்கண்ணே.

said...

அன்பு நண்பர்களே இந்த புகைப்படங்கள் நான் எடுத்ததல்ல. எங்கள் அலுவலக நண்பர் அனுப்பியவை. ஆனால் நிலைமை இப்படிதான் இருக்கிறது கடந்த நாற்பது நாட்களாக.

நான் எடுத்து ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்கள் :
http://manjoorraja.blogspot.com/2008/04/blog-post_30.html

இவை எங்கள் அலுவலகத்திலிருந்து எடுத்தவை.

said...

சிவா,
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

said...

சில சமயங்களில் ஜெய்ப்பூரில் கூட இப்பிடி புழுதிபுயல் அடிப்பதுண்டு...ரொம்பக் கஷ்டம்தான்!!!!
அன்புடன் அருணா

said...

உங்கள் இரண்டு பதிவையும் பார்த்தேன்..புழுதி ய பார்த்தாலே பீதி ஆகுதே..

வீடெல்லாம் குப்பையாவே இருக்கும் போல இருக்கே..எப்படிங்க இதை எல்லாம் சமாளிக்கறீங்க?

கொட்டாவி விடுறதுக்கு கூட வாய திறக்க கூடாது போல இருக்கே! :-)))

மஞ்சூர் ராசா நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்..இல்லைனா ஜனகராஜ் தலை மாதிரி எனக்கு ஆகிடும் :-))))

said...

திருமஞ்சூர் ராஜா அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

said...

படங்கள் அருமை