இதோ அதோ என்று ஒரு வழியாக பாகிஸ்தான் அதிபர் முசரஃப் பதவி விலகிவிட்டார்.
இது ஒரு விதத்தில் நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் தற்போது ஆட்சியிலிருப்பவர்களின் ஊழலை கணக்கெடுக்கும்போது பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமெரிக்காவின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் இருக்கும் என்று தெரியவில்லை. தற்போதைய அரசும் அமெரிக்காவை சார்ந்தே இருக்கும்.
இந்தியாவிற்கு மேலும் அதிக தலைவலி வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பேனசீரின் கணவரும், நவாஸ் செரீப்பும் விரைவில் முட்டிக்கொள்வார்கள் என்பதும் அரசல் புரசலாக தெரிகிறது.
மொத்தத்தில் தீவிரவாதிகள், தலிபான்களின் கை இனி ஓங்கும் என்றே தெரிகிறது.
இந்தியா இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Monday, August 18, 2008
முசரஃப் பதவி விலகியது சரியா?
Posted by
மஞ்சூர் ராசா
at
6:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முசரஃப் பதவி விலகியது சரியானதே. ஆனால் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன.தலைவலி தொடரும்.
முஷரப்பிற்க்கு வேறு வழியில்லை. இந்தியாவுக்கு தொல்லைகள் அதிகமாகும் என்பது உண்மைதான். பாகிஸ்தான் அரசுக்கு ISIஐ கட்டுப்படுத்தும் அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை.
Post a Comment