Saturday, May 26, 2007

நீங்கள் கல்ஃபில் வேலை செய்பவரா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."

டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"

ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"

டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."

ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"

டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."

ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"

டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"

ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். "
"காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்."
"காக்கா குளியல் குளிப்பேன்"
"மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்"
"முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்"
"இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்"
"எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்"
"என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்"
"என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"

டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"

ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"

டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"

நன்றி: அனுசுயா
ஆங்கிலத்திலிருந்து

8 comments:

said...

கலக்கல் ஜோக் மஞ்சூர் அண்ணா. சொன்னமாதிரி எல்லா வேலையும் இப்ப இப்படித்தான் இருக்கு..:)

said...

ஆஹா
இது கொஞ்சம் ஓவர் :)

என் சொந்த அனுபம் கேட்டிங்கன்னா இந்த கல்ஃப் வேலைய பொறுத்தமட்டில் சொர்க்கம்
அடிக்கடி இந்த வலைப் பக்கமும் வந்திட்டு போங்க மஞ்சூர்

Anonymous said...

good post


MR.X

said...

ஆகா நன்றி அய்யா ஆங்கிலத்தை இவ்வளவு அழகா தமிறுக்கம் பண்ணியிருக்கீங்க. நன்றா உள்ளது.

said...

சாய்ச்சுபுட்டிங்களே ராசா....

said...

ஏன் அதிகாரி...கல்ஃப் வேலை அவ்வளவு மோசமா என்ன...?

said...

ஆங்கிலத்தில் வந்த ஈமெயிலில் இதை முன்பு படித்தது ஞாபகம் வருகிறது.

ASALAM

said...

ஆகா ஆங்கிலத்தில் அனுப்பியதை சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளீர்கள். நன்றி :)