அன்பு நண்பர்களே
இட்லி வடைக்கு நேர்ந்தது போல எனக்கும் நேர்ந்தது. ஓசை செல்லாவின் முகவரியிலிருந்து வந்த மடலை திறந்து ஓர்குட்டில் நுழைய எத்தனித்து என் கடவுச்சொல்லை இட்டதால் என் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது.
என்னால் வலைப்பதிவுக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஓசையை தொடர்பு கொண்டப்போது அவருக்கும் அதே போல மடல் வந்தது என்றார்.
என் கடவுச்சொல்லை திருடியவனின் முக்கிய குறிக்கோள் முத்தமிழ் கூகில் குழுமத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே. என் கடவுச்சொல் மூலம் நிர்வாகத்திற்குள் நுழைந்து மாடரேட்டர்கள் அனைவரையும் நீக்கியிருக்கிறான்.
ஆனால் அவனது துரதிர்ஸ்டம் ஓனரை நீக்க முடியவில்லை. கூகிளில் இது ஒரு வசதி. ஓனர் ஐடி மூலம் மீண்டும் முத்தமிழில் நாங்கள் நுழைந்து எனது திருடப்பட்ட முகவரியை நீக்கிவிட்டோம்.
பிறகு மூன்று நாட்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு இன்று 31.10.07 காலையில் எனது பெயரில் முத்தமிழுக்குள் நுழைந்திருக்கிறான். உடனே எனக்கு தகவல் கிடைத்தது.
நண்பர்கள் பேசி பார்த்தனர். அவன் ஒருவார்த்தை பதிலிலேயே பேசியிருக்கிறான்.
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மடல்களை எனது முகவரியிலிருந்து பலருக்கு பார்வேர்ட் செய்திருக்கிறான். இதிலிருந்து இவனது நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.
இந்த சமயத்தில் கூகில் மூலம் மீண்டும் எனது ஐடி திரும்ப கிடைத்ததால் நான் உள்நுழைந்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.
யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.
என் ஐடி திருடப்பட்டதை அறிந்து குழுமங்கள் மற்றும் பதிவுலகில் இருந்து பலரும் ஆறுதலும் உதவிகளும் அளித்தனர். அனைவருக்கும் மிகவும் நன்றி.
Wednesday, October 31, 2007
கடவுச்சொல் திருட்டு
Posted by மஞ்சூர் ராசா at 10:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
hey your id was stolen by moorthi .everyone knows this
//யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.//
நானும் இந்த சூழ்ச்சி வலையில் மாட்டியிருந்திருப்பேன். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் ஆர்க்குட் சுட்டி தந்தான். ஆர்க்குட் என்னை பொருத்தவரை கசப்பான அனுபவமே தந்ததால், யார் பெயரிலிருந்து மெயில் அனுப்பப்பட்டதோ, அவருக்கே ஃபோன் செய்து ஆர்க்குட்டில் வந்ததை நகலெடுத்து ஒட்டி அனுப்பும்படி கேட்க, அவர் பதறிப்போய் தான் அப்படியெல்லாம் அனுப்பவேயில்லை என கூற, நான் அந்த மெயிலை குப்பைத் தொட்டியில் போட்டேன்.
யார் யாருக்கு நெருக்கம், யார் யாரை நம்புவார்கள் என்பதையெல்லாம் அறிந்து செயலாற்றுபவன் என்பதை நினைவில் கொண்டு, கடந்த கால அனுபவங்களையும் பார்த்தால் யார் இதெல்லாம் செய்தது என்பது என்னைப் பொருத்தவரை வெள்ளிடைமலையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment