இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி குவைத் அரட்டை அரங்கத்தில் என் புத்திரி பேசுகிறாள் என்ற தகவல் கிடைக்க, சரி வேலைக்கு கொஞ்சம் லேட்டா போனாலும் பரவாயில்லெ எப்படியாவது பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.
ஞாயிறு காலை
நண்பரின் போன், என்னப்பா உம்பொண்ணு அரட்டை அரங்கத்திலே பேசறா, பாக்கபோறயா, இல்லெ, இன்னிக்கும் வேலெ வேலென்னு போயிருவியா என்று குரல் கொடுத்தார்.
சனிக்கிழமையிலிருந்தே வீட்டிலெ சன் டிவி தகராறு செஞ்சிட்டிருந்தது. சரி ஞாயிற்றுக்கிழமை காலையிலே சரி ஆயிடும்ன்னு நினெச்சோம், ஆகலெ, சரி நண்பர்கள் வீட்டிற்குப் போய் பாக்கலாம்னு நினெச்சா,
ஆபிஸிலிருந்து தொல்லைபேசி, உடனே வரசொல்லி, 8.30க்கு ஒளிப்பரப்பு, இப்ப மணி 7.50, ஆபிஸுக்கு அடிச்சி பிடிச்சிப் போய் சேந்தா மணி 8.15,
அங்கிருந்து பேங்க் போகவேண்டி இருந்தது, மறுபடியும் ஓட்டம், பேங்க் வேலெ முடிச்சிப் பார்த்தா மணி 8.26, இன்னும் 4 நிமிசந்தான் இருந்தது.
சரி பக்கத்திலிருக்கிற திருச்சி ஓட்டல்லெ போய் பாக்கலான்னு அங்கெ போனா அவங்க 12 மணிக்குத்தான் கார்டு சிஸ்டத்திலெ வரும்னுட்டாங்க.
மண்டெக்காஞ்சி போய் இன்னொரு ஓட்ட்ல்லெ போய் பார்த்தா அங்கெயும் இல்லே. வெயில் வேறெ கொளுத்துது
நொந்து நூலாகி போயி, சரி ஒரு இட்லி வடையாவது சாப்பிடலான்னு ஆர்டர் கொடுத்துட்டு நிக்கும் போது நம்ம நண்பர் ஒருத்தர் வந்தாரு,
என்னப்பா இந்த நேரத்திலெ இங்கே?
இன்னிக்கு அரட்டை அரங்கம் பார்க்காலம்ன்னு வந்தேம்பா,
எம்பொண்ணு பேசுது அது என்னாடான்ன எங்கேயும் வர்றதில்லெ
அப்படியா? எனக்கு தெரியவே இல்லெயே, முபாரக்கியா ஹோட்டலுக்கு போனா இருக்குமேன்னாரு.
ஆர்டரே அப்படியே கேன்சல் செய்துட்டு முபாரக்கியா ஓடுனா அங்கெ ஜீ ம்யூசிக் ஓடுது.
அப்புறம் ஓட்டல்காரங்கிட்டெ பேசி
அவன் சன் டிவி போட்டப்பொ 8.47.
பொண்ணுப் பாதி பேசி முடிஞ்சிருச்சி,
மீதி பாதியெ பார்த்துட்டு,
இட்லி வடெயெ சாப்ட்டுட்டு வந்தேன்.
ஏதோ பொண்ணு மூஞ்சியெயாவது பாத்தோமெங்கற சந்தோசம்தான்.
Tuesday, June 21, 2005
அரட்டை அரங்கம்
Posted by மஞ்சூர் ராசா at 6:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நெஞ்சைத் தொடுகிறது மஞ்சூர். சில நேரங்களில் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கும் போது,எல்லாமே கழுத்தறுக்கும் என்பார்கள். அது தான் இதுவோ.
அடடா!., காசெட்ல பதிவு பண்ணி வைக்கச்சொல்லியிருக்கலாமே நண்பர்களிடம்., எங்கப்பா அரசு அதிகாரி ., போதாததற்கு, அரசு அலுவலர் சங்க மாவட்டத் தலைவர், மாநிலப் பொருளாளர்., வீட்டுக்கு அவர் வரும் நேரம் நாங்கள் எல்லாம்., தூங்கியிருப்போம்., தவிர எங்களுடைய எந்த ஒரு 'சாதிப்பிற்கும்' அவரால் இருக்கமுடியாது., எவ்வளவு கோபம் வரும் தெரியுமா எனக்கு?., சிறிய வயதில் யாரவது அப்பாவை ஞாயிற்றுக் கிழமைகளில் பார்க்க வந்தால்., அவரை ஒரு அறைக்குள் தள்ளி கதவை வெளியே பூட்டி விடுவேன். ஆயிரம் பேர் பேச்சைக் கேட்டாலும் அப்பா கேட்பதுபோல் ஆகுமா?., அய்யய்யோ., உங்க சோகத்தை அதிகப் படுத்தி விட்டுட்டேன் போல இருக்கே?.
அருமை சார்,
நல்லா இருக்கு, அந்த நிகழ்ச்சி தொகுப்பு இருந்தால், உங்கள் வலைப்பூவிலோ அல்லது வலைப்பக்கத்திலோ இடலாமே?? ஏஞ்சல்ஃபயர் தளத்தில் இலவசமாக இடம் தருகிறார்களே???
காத்திருக்கும்,
சிவா....
பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
வணக்கம் அய்யா,
குவைத்தில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் சிடிகள் கிடைக்கிறது, என்னிடம் உள்ளது, உங்களுக்கு வேண்டுமா?
Post a Comment